பிரதான செய்திகள்

உரம் இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியுடன் நாளை கூட்டம் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ

களை கொல்லிகள், பூச்சி கொல்லிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகளை மீண்டும் இறக்குமதி செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அனுமதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் நாளை (22) இடம்பெறவுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ இன்று (21) தெரிவித்தார்.

நாளை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ, மூன்றாவது மற்றும் நான்காவது தொகுதி உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கோரவுள்ளதாக தெரிவித்தார்.

இயற்கை விவசாயத்தை ஒரே நேரத்தில் செய்ய முடியாது என்பதால், மூன்று பருவங்களில் 100 சதவீதம் இயற்கை விவசாயம் செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும், முதல் மற்றும் இரண்டாவது பருவங்களுக்கு களை கொல்லிகள், பூச்சி கொல்லிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகளின் ஆதரவு தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் வாழமுடியாத சூழல் உருவாக்கப்படுகிறது – சி.சிறீதரன்

wpengine

கண்டி மாநகர எல்லையில் பாதயாத்திரை செல்ல முடியாது- நீதி மன்றம்

wpengine

மன்னார் புதைகுழி அகழ்வு 133ஆவது நாளாக தொடர்கின்றது.

wpengine