Breaking
Sat. Nov 23rd, 2024

Vijaya Baskaran
——————————————-
அரசியலைப் பொறுத்தவரை மிகவும் திட்டமிட்டே செயலாற்றிய ஒரு அரசியல்வாதி.அவரின் மதவாத போக்கை ஏற்காதபோதும் அவரது சமூகத்தின் தேவைகளுக்காக நிறையவே செய்துள்ளார். அரசியல் என்று வரும்போது மதவாதம் அநாகரீகமான ஒன்றாக இருந்தாலும் தான் சார்ந்த மதம் சார்ந்தவர்களின் நலனுக்காக பணியாற்றியவர்.அவரளவுக்கு தமிழ் பேசும் அரசியல்வாதிகள் குறிப்பாக இந்து அரசியல்வாதிகள் மக்களுக்காக ஒரு துளியளவேனும் செய்யவில்லை.

இப்படிப்பட்ட ரிசாத் பதியுதீன் வீட்டில் வேலைக்குச் சென்ற பெண் தீக்காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மரணமாகியுள்ளார்.இதன் குற்றவாளியாக ரிசாத் பதியுதீன் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

இன்றைய சூழலில் அரசியல் மட்டும் சட்டரீதியான நெருக்கடிகளில் சிக்கியுள்ள ரிசாத் பதியுதீன் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடக்க சந்தர்ப்பங்கள் இல்லை.அடுத்து அந்தப் பெண்ணை எரிக்க நினைப்பவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று காப்பாற்ற நினைப்பார்களா?சம்பவம் அவர் வீட்டில் நடந்துள்ளது.ஆனால் எது எப்படி இருந்தாலும் உண்மைகள் இன்னமும் தெளிவாக இல்லை.

இந்த சம்பவம் ரிசாத் பதியுதீன் வீட்டில் நடந்தபடியால் அதற்கு அவர் பொறுப்பேற்கவேண்டும் . பதில் கூறவேண்டிய தார்மீக கடமை உண்டு.உண்மைகள் வரவேண்டும்.

இந்தச் சம்பவத்தை வைத்து அவரை அரசியலில் இருந்து ஓரம் கட்ட வாய்ப்பாக பலர் கருதுகிறார்கள்.வீட்டில் வேலைக்கார்ர்கள் இல்லாத அரசியல்வாதிகளோ அரசு அதிகாரிகளோ இல்லை.எல்லோருமே சட்டத்தை மதிக்காமல் சிறுவர்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். ஒழுங்காக சம்பளம் வழங்காமல் கொடுமைக்படுத்துவது நமது நாட்டில் வழமையான சம்பவங்களே.

1972-73 காலப்பகுதிகளில் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக வடக்கே பல மலையகத் தமிழர்கள் பெரியவர்கள் குழந்தைகள் என உணவுக்காக வேலைதேடி வந்தார்கள்.அவர்களுக்கு நடந்த சித்திரஙதைகளை கண்ணால் கண்டிருக்கிறேன்.1960 களின் முன்பாக பல சிங்கள பெண்களை யாழ்ப்பாணத் தமிழர்கள் வேலைக்கு வைத்து கொடுமைக்படுத்தியதாகவும், பலரை கர்ப்பபாக்கி பின்னர் சிசுக்களை கொன்றதாகவும் காலம் சென்ற எழுத்தாளர் எஸ்.பொ தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இன்றைக்கு ரிசாத் பதியுதீனை அரசியலில் இருந்து விரட்ட இந்தச் சம்பவத்தைப் பலர் கையில் எடுத்துள்ளனர்.இது இறந்த சிறுமி மீதான அக்கறை அல்ல. இன மத வாத உணர்வுகளின் வெளிப்பாடு மட்டுமே.இறந்த டயகம கிசாலினியைப் போல பல ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமிகள் வறுமை காரணமாக சட்டத்துக்குப் புறம்பான வகையில் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.

இந்த வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் தமிழர்கள் முஸ்லீம் சிங்கள சிறுவர்கள் என பாகுபாடு இல்லை. எல்லோருக்குமே பாதிப்பு உண்டு.அதேபோல வேலைக்கு அம்ர்த்துபவர்களும் இன மத பாகுபாடு இல்லை. அவர்களுக்குத் தேவை வீட்டு வேலைக்கு ஒரு ஆள்.கொடுமைகள் எல்லோருக்கும் பொதுவானது.முதலாளிகள் எல்லாம் ஒரே வர்க்கம்.

டயகம கிசாலினியின் மரணத்தின் பின்பாவது வறுமை காரணமாக வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுவர்களுக்கு நியாயம் கிடைக்குமா?அதற்காக இந்த நாட்டு மக்கள் குரல் எழுப்புவார்களா?இந்த சம்பவத்தை முன்னிலைப் படுத்தும் ஊடகங்கள் செய்திகளை விடுமா?

இதுவும் கோகிலாம்பாள் கொலை வழக்குப்போல ஊடக வியாபாரத்துக்குப் பயன்படும்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கோ அல்லது அவரது குடும்பத்துக்கோ நியாயம் கிடைக்கப்போவது இல்லை.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *