பிரதான செய்திகள்

225 பேருக்கும் பொறுப்புள்ளது – ஜனாதிபதி

பாராளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பொறுப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஹொரணையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

பின்னர், அங்கு உரையாற்றிய ஜனாதிபதி நேற்று (03) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பின்வருமாறு விளக்கமளித்தார்.13094246_10154029478781327_4631204559312827631_n

நேற்று பாராளுமன்றத்தில் நிகழ்ந்த விடயத்தை நோக்கும் போது அது பிரச்சினையாக மாறியுள்ளது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்று சொல்வார்கள். 1989 ஆம் ஆண்டு இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்றன. நான் எவரையும் தாக்கியதில்லை. எனினும், பாராளுமன்றத்தில் என் மீது தாக்குதல் மேற்கொண்டனர். வாசுதேவ நாணயக்காரவை இழுத்துச் சென்ற காமினி லொக்குகே, சபாநாயகரின் கதிரைக்கு அருகில் விட்ட சம்பவம் எனக்கு நினைவிற்கு வருகிறது. ஒரு முறை நான் அமர்ந்திருக்கும் போது திடீரென வந்த ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் என் மீது தாக்குதல் மேற்கொண்டார். ஆறு வருடங்களின் பின்னர் நான் அமைச்சராக இருக்கும் போது அவர் ஒரு தேவைக்காக எனது அமைச்சுக்கு வந்தார். நான் அவருடைய தேவை குறித்து அதிகக் கவனம் செலுத்தி, அதனை செய்து கொடுத்தேன். அவ்வாறு என் மீது தாக்குதல் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போது என்னை ஜனாதிபதியாக்குவதற்கு அயராது செயற்பட்டு எனக்கு வாக்களித்தார். பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களுக்கும் பொறுப்புள்ளது. அவர்கள் பாராளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டும்.

Related posts

வவுனியாவில் போதைப்பொருள் பாவனை! விஷேட அதிரடிப்படையினர் களத்தில்

wpengine

மோசமான மோசடிகள் மாநகர சபைக்குள் ,உள்ளுராட்சி சபைகளிற்குள்ளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

wpengine

ஞானசாரவை உருவாக்கியது யார்? உங்கள் தலைவர் ரணிலிடம் கேளுங்கள் அமைச்சர் றிஷாட் ஆவேசம்

wpengine