பிரதான செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்!

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது

சம்மேளனம் இன்று (22)  விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 

கடந்த 2019ஆம் ஆண்டு அரங்கேரிய காட்டுமிராண்டித்தனமான தற்கொலை பயங்கரவாத தாக்குதலின் இரண்டாம் வருட நினைவு தினத்தை நாமும் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நினைவுகூறுகின்றோம் 

மேற்குறித்த மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிர்களை இழந்த மற்றும் காயமடைந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தங்கள் அன்புக்குரியவர்களினுடைய இழப்பால் துன்பப்படுகிற அனைவருக்கும் எல்லோருக்கும் பொதுவான இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்.

உண்மையான குற்றவாளிகள் மற்றும் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டு, சட்டத்தினூடாக முறையாக தண்டிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்திப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

Related posts

2000 கிராம சேவையாளர்கள் பதவி வெற்றிடம்

wpengine

பயங்கரவாதத்தை அடையாளம் காண, செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் facebooK

wpengine

‘அடுத்த முதலமைச்சர் தொடர்பில்

wpengine