அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் ஆலோசனைக்கமைய மன்/பாலைக்குழி அரசினர் பாடசாலையில் கல்வி பயிலும் சுமார் 100 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்,சீருடைகள், மற்றும் பாதணிகள் போன்றவற்றை வடமாகாண சபை உறுப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கி வைத்தார்.
கற்றலரிவுள்ள ஒரு சமுகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது மேலும் இன் நிகழ்வில் உரையாற்றிய வடமாகான சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்கள் ” 1990ம் ஆண்டுகளில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அன்று நாங்கள் அகதியாக எமது சொந்த இடத்தை விட்டு வெளியேறினோம் அன்று எமது வாழ்க்கை கேள்விக்குறியாக காணப்பட்டது.
அன்றைய காலப்பகுதிகளில் குடும்ப சுமைகளையும் தாங்கிக்கொண்டு யாருடைய உதவிகளும் இன்றி தெரு விளக்குகளில் இருந்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களும் அவர்களோடு இணைந்து நாங்களும் கல்வியை கைவிடாது பல போராட்டங்களுக்கு மத்தியில் கல்வி பயின்று இந்த நிலைக்கு வந்திருக்கின்றோம் ஆனால் இன்றைய எமது சமூகம் அந்த கஷ்டத்தை அனுபவிக்கவில்லை.
காரணம் அமைச்சர் அவர்களது முயற்ச்சியால் இன்று சொந்த இடங்களுக்கு குடியேற்றப்பட்டதோடு அவர்களுக்கான தேவைகளையும் தொடர்ச்சியாக செய்து வருகிறார் அதுமட்டுமன்றி நாங்கள் அன்றுபட்ட கஷ்டத்தினை இனி ஒருகாலமும் எமது சமூகம் அனுபவிக்கக் கூடாது எனவும் அதற்காக நாங்கள் யாரோடு வேண்டுமானாலும் போராட தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார் .
மேலும் எமது சமூகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சொல்ல இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான அனைத்து தேவைகளையும் பாரபட்சமின்றி செய்வோம் எனவும் அது கட்சி மற்றும் மத வேறுபாடுகள் இன்றி சேவை செய்ய நாங்கள் தயார்” எனவும் தனது உரையில் தெரிவித்தார்.
பாலைக்குழி பாடசாலை கட்டடத்திற்கான புனரமைப்பு வேலைத் திட்ட பணிக்காக ரூபா 50,000 தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.