ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட், இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக முன்னெடுத்துள்ள முதல் சர்வதேச பொறிமுறையாக, போர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இராணுவ தளபதி சவேந்திர சில்வா, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன உட்பட 28 இராணுவ அதிகாிகள் குறித்து விசாரித்து, சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சட்ட ஆலோசனை குழு ஒன்றை நியமிக்க தீர்மானித்துள்ளார்.
இலங்கையின் வடபகுதிக்கு சென்று, போர் குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களை பெறுவதற்காக இலங்கைக்கு வர அந்த விசாரணை குழுவினர், இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் அந்த விசாரணை குழுவினர் இலங்கைக்கு வர அனுமதி வழங்குவது தொடர்பாக அரசாங்கம் இதுவரை தீர்மானங்களை எடுக்கவில்லை.
இந்த விசாரணை நடவடிக்கைகளுக்காக ஜெனிவா மனித உரிமை பேரவை, ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இருந்து 2.8 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொண்டுள்ளது.