பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

காணாமல் போனோர் தொடர்பில் டக்ளஸ் ஜனாதிபதியிடம் கோரிக்கை

வடக்கு மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பில் கலந்துரையாடியதற்கிணங்க மூன்று கோரிக்கைகள் மற்றும் பரிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் போன உறவுகளைச் சந்தித்துள்ள நிலையில் இவ்வகையான முன்னெடுப்புகள் தொடர்பில் கருத்து கூறுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் போன உறவுகளின் உறவுகளை சந்தித்த அவர்களுக்கு இவ்வகையான பரிகாரங்களை முன்னெடுக்கலாம் என குழு ஒன்றின் மூலம் தீர்மானங்களை எடுத்திருந்தோம்.

இராணுவத்தினரால் காணாமலாக்கப்பட்டோர், விடுதலைப்புலிகளால் காணாலாக்கப்பட்டோர், மற்றும் தெரியாதவர்களால் காணாமலாக்கப்பட்டோர் என மூன்று பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

காணாமலாக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்களுக்கு என்ன நடந்தது? என்ற விடயத்தை தெளிவு படுத்தல், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பொறுப்பில்லாத கடன்களை ஏற்படுத்துதல், வீட்டுத்திட்டம் மற்றும் அரச வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்தல் ஆகிய சிபார்சுகளை உள்ளடக்கிய எழுத்து மூல ஆவணம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆகவே குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியை விரைவில் சந்தித்து தீர்வொன்றைக் காண்பதற்கு எண்ணியுள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

வட கிழக்கு இணைப்பிற்கு ரவூப் ஹக்கீம் எதிரனாவரல்ல -சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

wpengine

மியன்மார் முஸ்லிம்களுக்காக யாழ்ப்பாணத்தில் போராட்டம்! ஐ.நா.வில் மகஜர்

wpengine

முசலி பிரதேச செயலாளர் தலைமை! முள்ளிக்குளம் மக்களின் காணி ஆவணங்கள் பரிசீலினை

wpengine