முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி !
பூமூதீன்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது..
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது.
இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை – ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி – கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் – அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை – ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
இம்ரான் கான் – கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் – ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை – அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது.
ஹக்கீம் – விருந்தில் கலந்து கொண்டதன் மூலம் – பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் – ஜனாஸா எரிப்பு விவகாரம் – இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சனைக்குரிய விடயமே இல்லை என்பதை – இம்ரான் கான் ஊடாக , முஸ்லிம் நாடுகளுக்கு எடுத்துக் கூறியுள்ளனர்.
முஸ்லிம்களின் அதிக பட்ச ஆதரவைப் பெற்ற முஸ்லிம் கட்சி ஒன்றின் தலைவராக தன்னை கூறிக்கொள்ளும் ரவூப் ஹக்கீம் – எதிர்த்தரப்பில் இருந்தாலும் அரசின் ஆதரவாளர் என்பதைக் காட்டும் பிரதமரின் இராஜதந்திர வலைக்குள்/ குழிக்குள் அவராகவே சென்று வீழ்ந்துள்ளார் மட்டுமன்றி சமுகத்தையும் காட்டிக் கொடுத்து விட்டார்.
பகலில் – மஹிந்தவையும் கோட்டாபயவையும் தூற்றுவது – இரவில் , அவர்களோடு உறவு வைத்துக் கொள்வது என்ற – ஹக்கீம் குறித்து சமூகத்தின் மத்தியில் இருந்து வந்த சந்தேகம் தற்போது உண்மைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்று தான் – 20வது திருத்த விடயத்தில் பசில் மற்றும் ஜனாதிபதியை சந்தித்து – எனது 4 எம்பீக்கள் வாக்களிப்பார்கள் என்று உறுதியளித்து – தமது எம்பீக்களையும் வாக்களிக்குமாறு கூறிவிட்டு – இப்போது சமுகத்தின் மத்தியில் இரட்டை வேடத்தை காட்டித் திரிகின்றார்.
முகா தலைவரின் இரட்டை வேடத்தை இன்னும் எதிர்பார்க்கிறோம்..