வடக்கு,கிழக்கை நீதிமன்றம் பிரித்திருக்கும் போது அதனை மீண்டும் இணைக்க முயற்சி எடுக்ககும் சம்பந்தனை கண்டித்து உலமா கட்சி தலைமையில் சிங்கள தலைவர்கள் இணைந்து இன்று காலை எதிர்கட்சி தலைவர் சம்பந்தனின் கொழும்பு இல்லத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகம் இருப்பதாக உலமா கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் சம்பந்தன் எதிர்கட்சி தலைவர் போல் செயற்படாமல் புலிகளின் நோக்கத்தை அடைந்து கொள்ளும் நோக்குடன் செயற்படுகின்றார், என்றும் மக்களின் பிரச்சினை பற்றி பேசாமல் சட்டத்திற்கு முரணாக செயற்படுகின்றார்.எனவே அரசாங்கம் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.