Breaking
Fri. May 3rd, 2024

இலங்­கையின் தேசிய கைய­டக்க தொலை­பேசி சேவை வழங்­கு­ன­ரான ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் நிறு­வ­ன­மா­னது தற்­பொ­ழுது அரச ஊழி­யர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், சமுர்த்தி             பய­னா­ளிகள் மற்றும் மூத்த பிர­ஜை­க­ளுக்கு மாதாந்த கட்­டண அடிப்­ப­டையில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் மொபிடெல் பெக்­கேஜ்­களை வழங்க முன்­வந்­துள்­ளது.

இந்­நி­க­ழ்ச்­சித்­திட்­ட­மா­னது தொலைத்­தொ­டர்பு மற்றும் டிஜிட்டல் கட்­ட­மைப்பு தொடர்­பான அமைச்சின் எண்­ணக்­க­ருவின் அடிப்­ப­டையில் அமைச்சர் ஹரிண் பெர்­ண்­டோவின் வழி­காட்­டலின் கீழ் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­துடன், அனைத்து இலங்­கை­யர்­க­ளுக்கும் நவீன தொழில்­நுட்ப வச­தி­களை அனு­ப­விப்­ப­தற்­கான வாய்ப்­பினை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்­காக அரசு மேற்­கொண்டு வரும்                முயற்­சி­க­ளுக்கு உந்து சக்­தி­யாக இச் செயற்­றிட்டம் அமைந்­துள்­ளமை விசேட அம்­ச­மாகும்.

இச்­செ­யற்­றிட்­டத்தின் கீழ் அரச ஊழி­யர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், சமுர்த்தி பய­னா­ளிகள் மற்றும் மூத்த பிர­ஜை­க­ளுக்கு மாதாந்த கட்­டண அடிப்­ப­டையில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் மொபிடெல் பெக்­கேஜ்கள் வழங்­கப்­படும். அத்­துடன் அரச ஊழி­யர்கள் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஸ்மார்ட் போன்­களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிட்­டி­யுள்­ளமை விசேட அம்­ச­மாகும்.

மொபிடெல் நிறு­வனம் கடந்த 2008 ஆம் ஆண்டு அரச ஊழி­யர்­க­ளுக்கு “மொபிடெல் உப­ஹார” சேவை­யினை அறி­மு­கப்­ப­டுத்தி நாட்டின் தொடர்­பாடல் துறையில் மிகப் பெரி­யதோர் புரட்­சி­யினை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தமை நாம் யாவரும் அறிந்­ததே.

2012 ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட “மொபிடெல் உப­ஹார ப்ரோட்பான்” சேவையின் மூலம் அரச ஊழி­யர்­க­ளுக்கு மிக சிறந்த சேவை­யினை வழங்­கி­யி­ருந்­த­துடன் தற்­பொ­ழுது                                   மேம்­ப­டுத்­தப்­பட்ட மிகச் சிறந்த சேவை­யினை வழங்க நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது.

நவீன தொழில்­நுட்­பத்தின் அனு­கூ­லத்­தினை அனை­வரும் அனு­ப­வித்­திடும் பொருட்டு                  முன்­னெ­டுக்­கப்­படும் இச்­செ­யற்­றிட்­டத்தின் மூலம் தொலை­பே­சி­யொன்­றினை பெற்றுக்                         கொள்­வ­தற்கு எந்­த­வொரு முற்­கொ­டுப்­ப­ன­வி­னையும் செலுத்தத் தேவை­யில்லை. மாறாக மீள திருப்பிப் பெறக்­கூ­டிய (Refundable Deposit) வைப்­பாக சிறு தொகை­யினை வைப்­பிட வேண்டும். தொலை­பே­சியின் பெறு­ம­தி­க்குரிய செலுத்த வேண்­டிய தொகை­யாது 24 மாதங்­க­ளுக்கு மாதாந்தம் மொபிடெல் பிற­கொ­டுப்­ப­னவு பட்­டியல் கட்­ட­ணத்­துடன் சேர்க்­கப்­படும். ஒப்­பந்த கால முடிவின் போது ஆரம்­பத்தில் வைப்பு செய்­யப்­பட்ட தொகை­யா­னது மீள் அளிப்பு செய்­யப்­படும்.

மேலும் இத்­திட்­டத்தின் கீழ் வழங்­கப்­படும் கைய­டக்கத் தொலை­பே­சி­க­ளா­னவை அதனை                    தயா­ரித்து விநி­யோகம் செய்யும் நிறு­வ­னத்தின் உத்­த­ர­வா­தத்­தினை கொண்­டிருக்கும். தேசிய அடை­யாள அட்டை மற்றும் ஏனைய ஆவ­ணங்­களைச் சமர்ப்­பித்து ஆரம்பக்கட்ட பரிசீலனைகளின் பின்னர் மேற் குறித்த பிரிவினைச் சேர்ந்த நபர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் அல்லது நவீன தொழில் நுட்பத்துடனான கையடக்கத் தொலைபேசியுடன் மொபிடெல் பிற்கொடுப்பனவு பொதியொன்றும் வழங்கப்படும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *