Breaking
Sun. Nov 24th, 2024

ஊடகப்பிரிவு –

ராஜபக்ஷக்களின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட சமய, கலாசார அடக்கு முறைகள் எளிதில் மறக்கக் கூடியவையல்ல, அற்ப சலுகைகளை வழங்கி, இவர்களால் உருவாக்கப்படும் முஸ்லிம் தலைவர்கள் குறித்து, சமூகம் விழிப்படைவது அவசியமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

“மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு ராஜபக்ஷக்கள் எடுத்துவரும் முயற்சிகள்’ எனும் தொனிப்பொருளில், அஷாத் சாலி வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதில் அவர் கூறியுள்ளதாவது,

“புலிகளைத் தோற்கடித்த பின்னர், உஷாரடைந்த ராஜபக்ஷக்களுக்கு பௌத்த கடும்போக்குகள் தொடர்ந்தும் ககொடுத்து வருகின்றன. இந்த ஏகாதிபத்தியவாதிகள் இன்னுமொரு தடவை ஆட்சிக்கு வருவதற்கு பல திட்டங்களை தீட்டிவருகின்றனர். சாதாரண பெரும்பான்மையன்றி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவதே இவர்களது விருப்பம். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்ட அரசியல் ஏற்பாடுகளை அழித்து, கடும்போக்குகளின் சிந்தனைகளை உயிரூட்டுவதற்கே இவர்கள் மூன்றிலிரண்டுக்கு ஆசைப்படுகின்றனர். இதற்காக முஸ்லிம் சமூகத்திலிருந்து சில சில்லறைத் தலைவர்களை ராஜபக்ஷக்கள் தெரிவுசெய்துள்ளனர். பாராளுமன்றப் பதவிகளைக் காட்டி ராஜபக்ஷக்களால் வளர்க்கப்படும் இந்த சில்லறைத் தலைமைகள், எமக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தவில்லை.

எத்தனை பள்ளிவாசல்களை எரித்தாலும், எத்தனை மத்ரஸாக்களை இடித்தாலும், எண்ணிலடங்காத முஸ்லிம் சகோதரிகளின் கலாசார ஆடைகளைக் களைந்து, மத உணர்வுகளைப் புண்படுத்தினாலும், ராஜபக்ஷக்களை எதிர்க்கக் கூடாதென்ற எண்ணக்கருவிலே இந்த சில்லறைத் தலைமைகள் வளர்க்கப்படுகின்றன. முஸ்லிம் பெண்களின் பர்தாக்களுக்குள் வெடிகுண்டுகளாம், அரபு நாடுகளின் உதவிகளெல்லாம் ஆயுதத் தயாரிப்புக்காம், மத்திய கிழக்கிற்குச் செல்வது மூளைச் சலவைக்காம், புரிந்துணர்ந்து வந்தாலும் பலாத்கார மத மாற்றமாம். இதுதான் கடும்போக்கர்களின் இன்றைய கொடுங்குரல்களாகவுள்ளன.” என்று கூறியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *