Breaking
Sun. Nov 24th, 2024

(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)
பொதுச் சேவை ஆணைக்குழுவால் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள தேசிய பாடசாலைகளில் காணப்பட்ட அதிபர் வெற்றிடத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு விசேட எழுத்துப் பரீட்சைகளும் நடாத்தப்பட்டு நேர்முகப்பரீட்சைகளும் முடிக்கப்பட்டுள்ளன.


தகைமைகளாக கல்வி நிருவாக சேவை தரம் 11,111 அல்லது அதிபர் சேவை தரம் 1 என்பன கோரப்பட்டு இருந்தன.முசலியில் கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் இருவர் இருந்தும் இவர்கள் முசலி தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடத்திற்கு விண்ணப்பிக்கவில்லை.அதிபர் தரத்தைச் சேர்ந்தோரில் ஒரு சிலரே விண்ணப்பித்திருந்தனர்.

இவ்வாறான அசமந்த போக்கு புதிய அதிபருக்கு சாதகமாக அமையலாம். விரைவில் தேசிய பாடசாலை அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட உள்ளன.முசலியைச் சேர்ந்த ஒருவர் அதிபராகும் வாய்ப்புக்கள் உள்ளன.

இப் பாடசாலையில் ஒரு அதிபர் விடுதியும்,ஆசிரியர் விடுதியும் உள்ளன.
முசலி தேசிய பாடசாலை மீளத்திறக்கப் பட்டதிலிருந்து அதன் கல்வி சார் அடைவுமட்டமும்,இணைப்பாடவிதான அடைவு மட்டமும் மிகத்தாழ்மட்டத்திலே உள்ளன.

இச்செயற்பாடுகள் மீள்குடியேற்ற வேகத்தையும் ,புத்தளத்திலிருந்து விரைவான முசலி மாணவ இடப்பெயர்வையும் தடுத்துள்ளன.மன்னார் மாவட்ட தேசிய பாடசாலை தரப்படுத்தலில்,அல்லது வடமாகாண தேசிய பாடசாலை தரப்படுத்தலில் முசலி தேசிய பாடசாலை எத்தனையாமிடத்தில் உள்ளது. இதைப்பற்றி வினவினால் சிலருக்கு தலைசுற்றும்.பௌதிக வளத்தையும், மானிட வளத்தையும் சரியாக முகாமை செய்து நல்ல வெளியீடுகளைக் கொண்டுவரவேண்டும்.இதைவிடுத்து மதில் கட்டினேன்.மாடிக்கட்டிடம் கட்டினேன் எனக் கூறிக்கொண்டு எனக்கு அரசியல் பலமுள்ளது.என்னை வலயக்கல்வி அலுவலகத்தாலோ அல்லது மா.க.திணைக்களத்தாலோ எதுவுமே செய்ய முடியாது.நான் ஓய்வு பெறும்வரை முசலி தேசிய பாடசாலைக்கு புதிய அதிபர் வரவிடமாட்டேன் என்கிறாராம் பதிலதிபர். இப் பாடசாலையை தேசிய பாடசாலையாக உயர்த்திய பெருமை அமைச்சர் றிசாத் பதியுதீனையே சாரும்அவர் பௌதீக வசதிகளையும் பெற்றுக்கொடுத்திருக்கின்றார்.

ஆனால் தகுதியான அதிபர்கள நியமிக்கப்படாததால் தேசிய பாடசாலைகளின் தரப்படுத்தலில் எந்ந மட்டத்தில் முசலி தேசிய பாடசாலை உள்ளது என்பதை வலயக்கல்விப்பணிப்பாளர்.அறிவார்.
“தகுதியான அதிபர்களின் கீழ் தகுதியற்ற பாடசாலை இருக்காது.தகுதியற்ற அதிபரின் கிழ் பாடசாலை ஒருபோதும் இருக்காது.” இதுதான் வரலாறு முசலி தேசிய பாடசாலைக்கு தகுதியான அதிபரையும் ,தகுதியான பிரதி அதிபர்களையும் ,உதவி அதிபர்களையும் வேண்டி நிற்கிறது.இதை வலயக்கல்விப்பணிப்பாளர்,மாகாணக்கல்விப்பணிப்பாளர்,கல்வி அமைச்சர் போன்றோர் எப்போது புரியப்போகிறார்கள்.

தேசிய பாடசாலைகள் நேரடியாக மத்திய கல்வி அமைச்சின் கீழ் இருந்தாலும் அவற்றைக் கண்காணித்தல் ,பரிசோதித்தல் போன்றவற்றை வலயக்கல்வி அலுவலகம் செய்யமுடியும் என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.
முசலி தேசிய பாடசாலையின் கல்விசார் அடைவு மட்டம் குறைவாக இருப்பது சிலருக்கு சாதகமாக இருக்கலாம்.இதனால் பாரிய இழப்புக்களை அடைவோர் முசலி மண்ணின் மைந்தர்களே! இதை முசலி ஜீனியஸ் தொடர்ந்தும் பார்த்துக்கொண்டு வாளாவிருக்க மாட்டார்கள்.

முசலிப்பிரதேச கல்விசார் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து முன்னேற்ற மன்னார்க்கல்வி வலயம் பின் நிற்குமானால் முசலிக்கான தனியான கல்வி வலயத்தைக் கோர வேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளப்படுவோம்.

முஸ்லிம் அரசியல் வாதிகள் முஸ்லிம் மாணவர்களின் கல்வி விருத்திக்கு துனைநிற்பார்களே தவிர ,மாறாகப் பாடசாலையையும் ,கல்வி அடைவுமட்டத்தையும் ,அழிக்கும் ,அதிபர்களையும் ,ஆசிரியர்களையும் பாதுகாக்க ஒரு போதும் துணைநிற்கமாட்டார்கள் என்பதைத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *