Breaking
Tue. Apr 30th, 2024

பொத்துவில் மண்மலை பிரச்சினை முற்றியமைக்கு முஸ்லிம் காங்கிரசின் போக்கே காரணம் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.


பொத்துவில் மண்மலை பிரச்சினை என்பது இன்று நேற்று ஆரம்பமானதல்ல. 1965ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அரச வர்த்தமானி அறிவித்தலில் பொத்துவில் மண்மலை பிரதேசத்தில் 30 ஏக்கர் 03ரூட் 02 பேர்ச்சஸ் காணி தொல்லியல் பிரதேசத்திற்குரியதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


1989ம் ஆண்டு முதல் முஸ்லிம் காங்கிரசுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இருந்த போதும் 1994 முதல் அக்கட்சி அமைச்சரவையில் இருந்து வந்துள்ளது.
மைத்திரி, ரணில், சஜித் ஆட்சியின் போதுதான் பொத்துவில் அபிவிருத்தி செய்யப்பட்டு புதிய பாதைகளும் போடப்பட்டு முஸ்லிம் மக்களும், முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தமிழ் கூட்டமைப்பு கொண்டு வந்த நல்லாட்சி அரசின் ஜனாதிபதி நேரடியாக வந்து மண்மலை பன்சலையை திறந்து வைத்தார்.


அப்போது இந்த முஸ்லிம் கட்சிகளும், மு. கா வின் பொத்துவில் பிரதேச ஆட்சியாளர்களும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். ரவூப் ஹக்கீம் தேர்தல் வந்தால் மட்டுமே கிழக்குக்கு உல்லாசம் வருபவர் என்பதால் அவர் இது பற்றி அன்றைய அரசிடம் பேசுவதற்குரிய அறிவோ, தைரியமோ, உணர்வோ இருக்கவில்லை.
நமது மண்ணுக்கேற்ற தலைமைகளை பலப்படுத்தாதன் விளைவை இன்று பொத்துவில் உட்பட முழு கிழக்கு மண்ணும் அனுபவிக்கிறது.


தங்களின் ஜனாதிபதி, பிரதமர் இருந்த நிலையில் தாமும் அமைச்சர்களாக இருந்த நிலையில் பொத்துவில் முஹுது மலைக்கான எல்லையை தெளிவாக குறிப்பிட்டு புதிய வர்த்தமாணி அறிவிப்பு செய்திருக்க முடியும். அதனை செய்யாமல் மௌனமாக தூங்கிவிட்டு இந்த அரசு தொல்பொருள்களை பாதுகாக்க செயலணி போட்டதும் துள்ளிக்குதிக்கிறார்கள்.


தாங்கள் அமைச்சர்களாக இருக்கும் போது என்ன அநியாயம் நடந்தாலும் அமைதியாக இருப்பது, தமக்கு எதிரான ஆட்சியென்றால் பயில்வான் லேகியம் திண்ற எருமை போல் துள்ளிக்குதிப்பதும் முஸ்லிம்கள் வாக்குப்பெற்ற கட்சிகளின் வழமையாக உள்ளது.


ஆகவே இந்த தேர்தலில் பொத்துவில் மக்களும் அம்பாரை மாவட்ட முஸ்லிம்களும் அரசுக்கு ஆதரவான உலமா கட்சி போன்ற கட்சிகளுக்கு வாக்களித்து வெல்ல வைக்கும் பட்சத்தில் பொத்துவில் பிரச்சினையை 1965ம் ஆண்டைய வர்த்தமானி பிரகரம் தீர்வைக்காண்பதற்கு எம்மால் உரிமையுடன் அரசிடம் கொண்டு சென்று தீர்வை பெற்றுத்தர முடியும் என உலாமாக் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *