Breaking
Fri. Nov 22nd, 2024

அத்தியாவசிய தேவைகளையுடைய மக்களுக்கான நிவாரணப் பணிகளாக உலர் உணவுப் பொருட்களை வழங்குவதில் கிடாச்சூரி கிராமம் ஏனைய கிராமங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது.

கொறோனா வைரசின் தாக்கத்திலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக தனிமைப்படுத்தல் திட்டத்தினை மேற்கொள்வதற்காக அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தியுள்ளது.இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

அன்றாடம் தினசரி வருமானங்களுக்காக வேலைக்கு சென்று வரும் மக்கள் வருமானம் இல்லாது பெரிதும் கஷ்டப்படுகின்றனர்.

இதனை கவனத்தில் கொண்டு பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள தொழிலாளர்கள் ஆகியோருக்கான நிவாரணப்பணிகளை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டத்தினை கிடாச்சூரி இளைஞர்கள் முன்வந்து செயற்படுத்துகின்றனர்.

கிடாச்சூரி கண்ணகி முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினர், ஏனைய கிராம அமைப்புகள் அனைத்தும் இணைந்து இச்செயற்திட்டத்தின முன்னெடுக்கின்றனர். தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஆ.அருளானந்தம் (அருள்) மற்றும் ஆசிரிய ஆலோசகர் அ.அமலேஸ்வரன் ஆகியோரின் வழிகாட்டலில்  கிடாச்சூரி மக்களிடம் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பொருட்களை சேகரித்து வருகின்றனர்.

இதுவரை 40 மூடை நெல்லு, 250 தேங்காய் மற்றும் அத்தியாவசியப் பொருட்களையும் சேர்த்துள்ளனர். இவை சுமார் 3,லட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களையும், பணத்தையும் கிடாச்சூரி மக்கள் வாரி வழங்கியுள்ளனர். இவற்றை அத்தியாவசிய தேவையுடைய மக்களுக்கு நாளை வழங்குவதற்கான பொதிகளாக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. அன்றாடம் தினசரி வருமானங்களுக்காக வேலைக்கு சென்று வரும் மக்கள் வருமானம் இல்லாது பெரிதும் கஷ்டப்படுகின்றனர்.

கிடாச்சூரி கண்ணகி முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினர், எமது கிராம அமைப்புகள் அனைத்தும் இணைந்து செய்யும் இச்சிறந்த மனிதாபிமான செயற்பாடுகளை ஏனைய ஆலய நிர்வாகத்தினரும், கிராம அமைப்புகளும் முன்னெடுத்து மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என கிடாச்சூரி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *