Breaking
Sat. Apr 27th, 2024

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சையில் இருக்கும் பிரித்தானிய தாயார் ஒருவர் மூச்சுவிடவே திணறுவதை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டு, எஞ்சிய பிரித்தானியர்களை எச்சரித்துள்ளார் .


அதில் கொரோனாவை எவரும் மிக எளிதாக எண்ண வேண்டாம் எனவும் அந்த 39 வயது தாயார் குறிப்பிட்டுள்ளார்.


மேற்கு லண்டனில் உள்ள ஹில்லிங்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 39 வயது Tara Jane Langston என்பவரே காணொளி ஒன்றை வெளியிட்டு, கொரோனா வைரஸ் பாதிப்பை எவரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என எச்சரித்த்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.


கொரோனா அறிகுறிகளோடு கடந்த வெள்ளிக்கிழமை அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்புக்கு உள்ளானார் என உறுதி செய்யப்பட்டது.


மூச்சுவிட திணறிய அவர், கடுமையான இருமலாலும் பாதிக்கப்பட்டிருந்தார். தமது அப்போதைய நிலையை காணொளியாக பதிவு செய்த அவர் தனது சக நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.


இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான அவர் தற்போது கொரோனா வியாதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.


புகைப்பிடிப்பவர்கள் எவரேனும் இருந்தால் கண்டிப்பாக விட்டுவிடுங்கள் என கூறும் அவர், உங்கள் நுரையீரல் பத்திரமாக இருந்தால் இந்த வியாதியில் இருந்து தப்பலாம் என்றார்.
உடல் முழுவதும் கடுமையான வலி இருந்ததாகவும், மூச்சுவிட திணறியதாகவும் கூறியுள்ள அவர், உடனடியாக மருத்துவமனை அவசர பிரிவுக்கு அழைத்து ஆலோசனை கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், சிகிச்சையில் இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *