பிரதான செய்திகள்

ஷாபியிடம் விசாரணைமேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரியிடம் வாக்குமூலம்

சிங்கள பௌத்த பெண்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சைககளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வைத்திய கலாநிதி ஷாபி ஷியாப்தீன் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.


பொலிஸ் அதிகாரி பி.எஸ். திசேரா என்பவரிடமே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதன்போது வைத்திய கலாநிதி ஷாபி ஷியாப்தீன் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலைவட்டு வாக்குமூலத்தை பெற்ற பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


கைது செய்யப்படும் போது வைத்தியர் குறித்த நிலைவட்டில் உள்ள தரவுகளை அழித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.


எனவே இந்த அழிக்கப்பட்ட நிலைவட்டு தொடர்பிலேயே தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தாக்குதல் பேஸ்புக்கில் பார்த்தே அறிந்துக்கொண்டேன் ஜனாதிபதி

wpengine

தேர்தல் தொடர்பில் கட்சி செயலாளர்களை சந்திக்க உள்ள மஹிந்த

wpengine

முன்னால் அமைச்சர் றிஷாட் கொண்டுவந்த தையல் இயந்திரங்களை மஸ்தான் வழங்கினார்.

wpengine