Breaking
Fri. Nov 22nd, 2024

2020 புத்தாண்டு உதயத்தில் அரச பணிகளை ஆரம்பிப்பதற்காக ஜனவரி மாதம் முதலாம் திகதி விசேட வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும், மாகாண பிரதம செயலாளர்களுக்கும் அரச நிறுவன பிரதானிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.

இதற்கு அமைவாக தேசிய கொடியை ஏற்றி தேசிய கீதத்தை இசைக்குமாறும் படை வீரர்கள் உள்ளிட்ட நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூறுவதற்காக 2 நிமிடம் மௌனம் செலுத்துமாறும் ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று அரச நிறுவனங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் தமக்கு வசதியான மொழியில் அரச சேவை உறுதி மொழியை வழங்க வேண்டும் என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு அரச பணியை ஆரம்பிப்பது தொடர்பான முக்கிய வைபவம் ஜனவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி செயலக வளவில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நாட்டை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு என்ற கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக பணியாற்றும் நாடு ஒன்றை ஏற்படுத்துவதற்கான அரச சேவை சிந்தனையின் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதினால் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரச நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *