M.B Mohamed Arshad
பொதுவாக பள்ளிப் பருவ நாட்கள் என்பது எம் வாழ்வில் என்றும் மறக்க முடியாத பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கிய காலமாகவே இருக்கும்.
அந்த அற்புதமான நாட்களையும் அழகிய நினைவலைகளையும் ஒரு கணம் மீட்டிப்பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என பலரும் ஏக்கத்துடன் ஆவலாக காத்திருப்பார்கள்.
அவ்வாறான அழகிய நாட்களை மீட்டிப்பார்ப்பதற்கு குருநாகல் மாவட்டத்தின் வயலும் வயல் சார்ந்த நிலமுமாகிய வெல்பொத்துவெவ என்னும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ள கல்வித் தாயின் குழந்தையாகிய அல் இல்மியா முஸ்லிம் மகா வித்தியாலயம் ஒரு வாய்ப்பு வழங்கியிருந்தது.
அல் இல்மியா பழைய மாணவர் சங்கத்தினால் “மீண்டும் பள்ளிக்கு போகலாம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் கடந்த 30 மற்றும் 01 ஆம் திகதிகளில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
குறித்த பாடசாலையில் இதுவரை காலமும் கல்வி பயின்று, இன்று பல்வேறு துறைகளில் நாடளாவிய ரீதியில் வலம் வந்து கொண்டிருக்கும் பல்வேறு வயதினர் பாடசாலைக்கு வருகை தந்து தங்களுது பழைய நினைவுகளை மீட்டிப்பார்த்தனர்.
இதன்போது அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டதுடன் கிரிக்கெட் போட்டி உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வுவின் போது சந்தித்துக்கொண்ட நண்பர்களின் முகங்களில் காணப்பட்ட சந்தோசத்தை வார்த்தைகளால் கூறி விட முடியாது. அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட ஊர் மக்கள் மத்தியில் இந்த நிகழ்வு பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் ஒவ்வொருவரதும் பழைய பாடசாலை வாழ்க்கை நினைவுகளையும் ஒரு கணம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியது.
நட்புக்கு இனமில்லை, மொழியில்லை, நிறமில்லை, குணமில்லை, ஜாதியில்லை, மதமில்லை என்று மட்டுமல்லமால் நட்புக்கு வயதுமில்லை என்று இவர்கள் நிரூபித்தனர். இந்த சந்திப்பில் முழு ஊரும் ஜோதி மயமானது.
இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்த பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்கும் அல் இல்மியாவின் பழைய மாணவர்கள் சங்கம் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.