இனவாத கருத்துகளை அடிப்படையாக கொண்ட பிரச்சாரங்கள் முறியடிக்கப்படாமையே புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியைத் தழுவ காரணம் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
எதிர்த்தரப்பினர் இனவாத மற்றும் பாசிசவாத கருத்துக்களை அடிப்படையாக கொண்ட பிரச்சாரங்களை முன்னெடுத்தனர்.
இந்த பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு உரிய பொறிமுறைமைகளை சஜித் தரப்பு முன்னெடுக்கத் தவறியது.
பிரதான இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், கீழ் மட்ட அடிப்படையில் சரியான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படவில்லை.
கூட்டணியில் அங்கம் வகித்த கட்சித் தலைவர்கள் வாக்களித்த மக்களை கைவிட்டுவிடக் கூடாது.
தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்கள் பெருமளவில் வாக்களித்தனர், அவர்களின் பிரச்சினைகளுக்கு கட்சித் தலைவர்கள் தீர்வு வழங்க வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும், அது நாடாளுமன்ற மரபுகளுக்கு அமைவானதாக இருக்க வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவி வகிப்பதனை தாம் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.