Breaking
Sat. Apr 27th, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அமைச்சரவையில் நியமிக்கப்பட்டுள்ள சில அமைச்சர்கள் சம்பந்தமாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு புறம்பாக செயற்படுவதாக கூறியே அவர்கள் இந்த எதிர்ப்பை முன்வைத்துள்ளனர்.

19வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யவே மக்கள் ஆணை வழங்கினர்

அதேவேளை 19வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நாட்டில் ஏற்படுத்திய ஸ்திரமற்ற நிலைமையை போக்கும் நோக்கில் அந்த திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்தல் உட்பட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் மிகப் பெரிய மக்கள் ஆணை கிடைத்தது எனவும் அவர் சுட்டிககாட்டியுள்ளார்.

இப்படியான நிலைமையில், மீண்டும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஈடான 21 வது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் முன்வைத்து, 2019 மற்றும் 2020 மக்கள் ஆணையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவை அதற்கு கோருகின்றனர்.

21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் இறுதி முடிவுவை எடுக்கும் முன்னர் அதனை விரிவாக ஆராய்ந்து மீளாய்வு செய்ய வேண்டும்.

எவ்வாறாயினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தில் ஒரு பகுதியை நாடாளுமன்றத்திற்கு வழங்குவதை எதிர்க்கவில்லை எனவும் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *