Breaking
Sun. Apr 28th, 2024

எனது மகள்கள் வீட்டிற்கு வெளியே சென்று எந்த விளையாட்டையும் விளையாடுவதற்கு அனுமதிக்கமாட்டேன் என பாக்கிஸ்தானின் முன்னாள் வீரர் சஹீட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
அப்ரிடி தனது கேம்சேஞ்சர் என்ற நூலில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர்கள் வெளியே மைதானத்திற்கு செல்லாமல் எந்த விளையாட்டையும் விளையாடலாம்,ஆனால் வெளியில் மைதானங்;களில் இடம்பெறும் விளையாட்டுபோட்டிகளில் கலந்துகொள்ள அவர்களிற்கு நான் அனுமதி வழங்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாடுவதற்கும் எனது மகள்மாரிற்கு நான் அனுமதி வழங்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சமூக மற்றும் மத காரணங்களிற்காகவே இந்த முடிவை எடு;த்தேன் எனவும் அவர் தனது நூலில் தெரிவித்துள்ளார்
பெண்களின் உரிமைகளிற்காக குரல்கொடுப்பவர்கள் எனது முடிவு குறித்து எதனையும் தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்ரீடியின் இந்த கருத்திற்கு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

ஏனையவர்களின் பெண்பிள்ளைகளுடன் பழகுவதில் ஆர்வம் காட்டும் ஆனால் தன் பிள்ளை அதனை செய்தால் அதற்கு தடைவிதிக்கும் சராசரி பாக்கிஸ்தானிய பிரஜையை விட அப்ரீடி மேலானவர் அல்ல என வர்ணணையாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

உங்களின் பெண்பிள்ளைகள் தங்களிற்கு பிடித்தமானவற்றை தெரிவு செய்வதை தடுப்பது மிக மோசமான செயல் என டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள மற்றுமொரு நபர் பாக்கிஸ்தானிற்கு சர்வதேச அளவில் பெருமையை தேடித்தந்துள்ள மகளிர் கிரிக்கெட் அணியையும் தனது கருத்து மூலம் அப்ரீடி அவமதித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

அப்ரீடியின் இந்த கருத்தை பாக்கிஸ்தானிற்கு இன்னொரு பிரதமர் தயாராகிவருகின்றார் என ஒருவர் டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.

2014 இல் பெண்களின் கிரிக்கெட் திறமை குறித்த கேள்விக்கு பெண்களின் சமையல் திறமை குறித்து கருத்து தெரிவித்து அப்ரீடி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *