Breaking
Thu. Apr 25th, 2024

தற்போதைய நிலையில் தேசிய பாதுகாப்பிற்கு புர்கா ஆடை அச்சுறுத்தலாக காணப்படுகின்றது என்று பொது மக்கள் தங்களின் அதிருப்தியினை வெளிப்படுத்தியுள்ளார்கள். அத்துடன் முஸ்லிம் பெண்களும் இவ்வாறான நெருக்கடிகளுக்கு பொது இடங்களில் முகம் கொடுத்துள்ளார்கள் .

இவ்விடயம் தொடர்பில் எவ்வித முறையான வழிமுறைகளும் வகுக்கப்படவில்லை. புர்கா ஆடையினையும் தடை செய்தாக குறிப்பிடப்பட்டுள்ளளே தவிர வர்த்தமானி வெளியிடப்படவில்லை.

ஆகவே அரசாங்கம் தொடர்ந்து மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளையே நெருக்கடி நிலையில் வழங்குகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களான தேசிய தவ்ஹீத் ஜமாஆத், மற்றும் ஜமாத் மில்லதுல் இப்ராஹிம் மீயா செய்லாணி ஆகிய அமைப்புக்களும், புர்கா ஆடையும் அவரகால சட்டத்தின் பிரகாரம் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றமை மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும். இன்றும் அரசாங்கம் அடிப்படைவாத அமைப்புக்களுடன் தொடர்புடையவர்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளவே விரும்புகின்றது.

கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் பல கேள்விகளையும், அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளையும் அம்பலப்படுத்தியுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருக்கும் காலங்களில் எவ்வித பிரச்சினைகளும் முடிவிற்கு கொண்டு வரப்படவில்லை, புதிதாகவே பிரச்சினைகளை அறிமுகமாகின.

2015ஆம் ஆண்டு பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழித்த நிலையில் ஆட்சி பொறுப்பேற்ற ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்து தீவிரவாத தாக்குதலுக்கும் தொடர் அச்சுறுத்தலுக்கும் உட்பட்ட நாட்டை பொறுப்பேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்கொலைதாரிகளின் தாக்குதலை தொடர்ந்து 2019ஆம் இலக்க முதலாவது அவசர சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய தவ்ஹீத் ஜ மாஆத் மற்றும் ஜமாத் மில்லதுல் இப்ராஹிம் மீயா செய்லாணி ஆகிய அமைப்புக்களை தீவிரவாத அமைப்புக்களாக கருதி கடந்த மாதம் 27ஆம் திகதி இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புக்களாக அறிவித்தார்.

அத்துடன் இவ்வமைப்புக்களின் அமையும் மற்றும் அமையா சொத்துக்களை அரசுடமையாக்குவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆனால் இவ்விடயம் தொடர்பில் அதாவது தடை செய்யப்பட்டமைக்காக உத்தியோகப்பூர்வ வர்த்தமானி வெளியிடப்படவில்லை

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *