பிரதான செய்திகள்

முஸ்லிம் கஞ்சிபான இம்ரானை மூன்று மாதங்கள் தடுப்பு காவலில்

துபாய் நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட கஞ்சிபான இம்ரானை மூன்று மாதங்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
கஞ்சிபான இம்ரான்  கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா டி சில்வா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இம்ரானை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

அதேவேளை இம்ரானுடன் நாடு கடத்தப்பட்ட ஜங்கா என்ற அனுஷ்க கௌசால் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ரொட்டும்ப அமில் என்ற அமில சம்பத் என்பவரையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

சாதாரணதரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்

wpengine

ரஷ்யா கண்மூடித்தனமான தாக்குதல் பதவிகளை இழந்த பூட்டின்

wpengine

அமைச்சர் றிசாத்தை மக்கள் சேவகனாக நாங்கள் பார்க்கின்றோம்! உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்

wpengine