பிரதான செய்திகள்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு! நாளை விடுதலை

ஆறு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாளைய தினம் விடுதலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சமூக வலைத்தள இணைப்பாளரான கவிந்த கமகே தனது முகநூல் பக்கத்தில் இதனை கூறியுள்ளார்.

எனினும் ஞானசார தேரரை விடுதலை செய்யும் எந்த தயார் நிலைகளும் இல்லை என ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் ஞானசார தேரரை விடுதலை செய்வது சம்பந்தமாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பொதுபல சேனா அமைப்பும் கூறியுள்ளது.

கலகொட அத்தே ஞானசார தேரரின் பிறந்த தினம் நாளைய தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

1L எரிபொருள் 100 ரூபாய்க்கு, மீனவர்களின் எதிர்ப்புக்கு ஆளாகிய அரசாங்கம் .

Maash

நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு!

wpengine

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

wpengine