பிரதான செய்திகள்

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் சுற்றுலாத்தளம்

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் சுற்றுலாத்தளம் அமைக்கும் நடவடிக்கையினை மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மேற்கொண்டுள்ளார்.
அதற்கு அமைவாக மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனின் பனிப்புரைக்கு அமைவாக மன்னார் பிரதான பால பகுதியில் இன்று காலை சிரமதான பணிகள் இடம்பெற்றுள்ளது.

மன்னார் பிரதான பாலம் மன்னார் நுழைவாயில் பகுதியின் இரு பகுதிகளிலும் பற்றைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் என்பன காணப்பட்டுள்ளன.

மேலும் மன்னார் பாலத்தடியில் மக்கள் பொழுது போக்கிற்காக வந்து செல்லும் கையில் சுற்றுலாத் தளம் அமைக்கும் நடவடிக்கைகளையும் நகர சபையின் தலைவர் மேற்கொண்டுள்ளார்.

தற்போது சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆயிரம் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்.

wpengine

அம்பாறையில் மரத்தின் மீது மயில் ஆட்டம்

wpengine

முசலி பிரதேச CTB டிப்போவின் அவல நிலை ! பிரதேச மக்கள் விசனம்

wpengine