Breaking
Mon. Nov 25th, 2024
மன்னார் மாவட்டத்தில் முசலி கல்விகோட்டத்திற்குவுபட்ட பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு பணம் பெறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுளளது.

1945 ஆம் ஆண்டு இலவசக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பாடசாலை அனுமதிகளுக்கு கட்டணம் பெறக் கூடாது என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

ஆனாலும், இவற்றை மீறி முசலி பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு பெற்றோரிடம் 2000 தொடக்கம் 3000 ரூபா பணம் அறவீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கபெற்றுள்ளன.

இதனை பாடசாலை நேரடியாக மேற்கொள்ளாது பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஊடாக மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறான பாடசாலைகள் மீது வட மாகாண ஆளுநர்,கல்வி அமைச்சின் செயலாளர்,அரசாங்க அதிபர்,வலையக்கல்வி பணிப்பாளர்,கோட்டக்கல்வி பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பணங்களை பெற்றுக்கொண்ட பாடசாலைகளின் பெயர் விபரங்களை விரைவில் எமது வன்னி நியூஸ் செய்தி பிரிவு வெளியிடும்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *