பாடசலை மாணவர்களின் கஷ்டத்தை கருத்தில் கொண்டு சீருடை,பாதணி வழங்க புதிய வவூச்சர் முறையினை நடைமுறைப்படுத்த வேளையில் இதனை வைத்துக்கொண்டு மன்னார்,கூளாங்குளம் பாடசாலையில் சில தில்லுமுல்லு இடம்பெற்றுள்ளதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபரினால் சீருடைக்கான வவூச்சர் வழங்கப்பட்ட போது பாதணிக்கான வவூச்சரை அதிபர் வைத்துக்கொண்டு பாதணி வழங்கும் தனியார் நிறுவனத்துடன் பேசிய வவூச்சர் பெறுமதிக்கான பாதணியினை மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என அறிய முடிகின்றன.
அத்துடன் (DSI) என்ற பொதி பொறிக்கப்பட்ட பாதணி வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில் மாணவர்களுக்கு பொறுத்தமில்லாத பாதணி கிடைக்கபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் முசலி பிரதேசத்தில் உள்ள அதிகமான அதிபர்கள் மாணவர்களுடைய சீருடை துணிக்கான வவூச்சரை வைத்துக்கொண்டு ஒப்பந்தகாரர்களுடன் பேசி சிறிய இலாபத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்கள். எனவும் பிரதேச செய்திகள் வெளியாகிவுள்ளன.
இது தொடர்பில் கோட்டக்கல்வி பணிப்பாளர்,வலயக்கல்வி பணிப்பாளர் ஆராய்ந்து வவூச்சரில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் ஆராய்ந்து மாணவர்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.