Breaking
Fri. Nov 22nd, 2024

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) 

இயேசுபிரானின் பிறப்பு விழாவானது கிறிஸ்மஸ் விழா என்ற பெயரில்
உலகமெங்கும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டுவருகிறது.

கிறிஸ்மஸ்
விழாவின் அடிப்படைச் செய்தியே கடவுள் மனிதன் ஆனார் என்பதாகும். இதனையே
திருவிவிலியத்தில்  ‘வாக்கு மனிதர் ஆனார்: நம்மிடையே குடிகொண்டார்’
(யோவான் 1:14) என்று யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

கடவுள் என்றால் அனைத்தையும் கடந்தவர். கால, தேச வர்த்தமானங்களைக்
கடந்தவர். அப்படியாக அனைத்தையும் கடந்தவர் இன்று காலத்திற்கு, இடத்திற்கு
தன்னைக் கட்டுப்படுத்தியவராக மனிதகுல வரலாற்றில் தன்னை
இணைத்துக்கொள்கிறார்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட இனத்தில்,
குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட பெற்றோருக்கு மகனாக, நாம்
தொட்டுணரக்கூடிய ஒரு மனிதக் குழந்தையாகப் பிறக்கின்றார்.

இதைத்தான்
கிறிஸ்துவின் மனுவுடலேற்பு என்று கிறிஸ்தவ இறையியல் குறிப்பிடுகின்றது.

கிறிஸ்துவின் இந்த மனுவுடலேற்பு என்பது கடவுள் மனுக்குலத்தின்மேல் கொண்ட
அளவற்ற அன்பின் அடையாளமாக இருக்கின்றது. ஆகவே கிறிஸ்மஸ் விழா என்பது
கடவுளின் அன்புக்கு நாம் எடுக்கும் விழா ஆகும். கடவுள் மனிதனானது
நமக்கெல்லாம் மகிழ்ச்சி தருகின்ற நற்செய்தியாகும். இதை நாம் கொண்டாட
வேண்டும். ஆனால் இந்தக் கொண்டாட்டம் வெளியரங்கமானதாக மட்டும்
நின்றுவிடாமல் உள்ளார்ந்ததாகவும் அமைய வேண்டும்.

கிறிஸ்து தன்னுடைய
பிறப்பின் ஊடாகக் கொண்டுவந்த விடுதலையை, இரட்சிப்பை, மீட்பை
அனுபவிக்கின்ற மகிழ்வை நாம் பெறவேண்டும். அதுதான் உண்மையான மகிழ்ச்சி.

ஆகவே இந்த மகிழ்வின் விழா நமது பாவங்கள், சாபங்களில்; இருந்து நமக்கு
விடுதலையைத் தருவதாக, இரட்சிப்பின், மீட்பின் அனுபவத்தை நம்மில்
ஏற்படுத்துவதாக!
உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் புதுவருட நல்வாழ்த்துக்களைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஒவ்வொருவரையும், உங்கள் குடும்பத்தையும்
இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக! (112)

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *