Breaking
Fri. May 17th, 2024

அரசாங்க பல்கலைக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அரசின் அதிகரித்த 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும், 23 வருடமாக எந்தவித ஓய்வூதிய அதிகரிப்புமின்றி இருப்பதாகவும் பல்கலைக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து அரச ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு அதிகரிப்பு ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்டதுடன், சமுர்த்தி பயனாளிகளுக்கும் அதிகரித்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. தனியார் துறையினருக்கும் அதிகரித்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசாங்க பல்கலைக்கழகங்களில் கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அரசாங்கத்தின் 5,000 ரூபாய் அதிகரிப்பு கொடுப்பனவு இது வரை வழங்கப்படவில்லை. அத்துடன் அவர்கள் கடந்த 23 வருடங்களாக ஓய்வூதியக் கொடுப்பனவு திட்டத்தில் எந்தவித அதிகரிப்பும், மறுசீரமைப்புமின்றி இருந்து வருகின்றனர்.

அவர்களது ஓய்வூதியம் தொடர்பான சுற்றறிக்கையில் மூன்று வருடத்திற்கு ஒரு தடவை ஓய்வூதிய மறுசீரமைப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்ட போதும் கடந்த 23 வருடமாக இது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இதனால் பல்கலைக் கழகங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தற்போதைய பொருட்களின் விலையேற்றத்திற்கு மத்தியில் தமது ஓய்வூதியம் போதாமை மற்றும் ஏனைய அரச சலுகைளையும் பெற முடியாமலும் பெரும் துன்ப நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் அரசாங்கத்தால் கொண்டு வருடப்பட்ட 5,000 ரூபாய் அதிகரிப்பை ஏனைய ஓய்வூதியர்களுக்கு வழங்கியது போன்று, பல்கலைக்கழங்களில் பணியாற்றி ஓய்வூ பொற்றவர்களுக்கும் வழங்குவதுடன், தமக்கான ஒரு சீரமைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி தம்மையும் வாழ வழிவிடுமாறும் பல்கலைக் கழகங்களில் இருந்து ஓய்வூ பெற்றவர்கள் மேலும் கோரியுள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *