பிரதான செய்திகள்

எதிரி தன்னை மட்டும் எழுத்துக்கு சொந்தக்காரனாக ஏலம்விடுபவனே!

கவிதைக்கும்
அதனை பிறசவிக்கும்
எழுத்துக்கும்
முதல் எதிரி
தன்னை மட்டும்
எழுத்துக்கு சொந்தக்காரனாக
ஏலம்விடுபவனே!

எழுத்துக்களுக்கு
தனிஈழம்
கோரும்
போதகர்களால்
கருவரையில்
கலைந்துபோகும்
புதிய சிந்தனைகளுடைய
எழுத்துக்கள் கோடி!

உனது எழுத்துக்களுக்கு
குரப்பிரசவத்தால்
அடகு மொழியில்
தனக்குத்தானே
பட்டம் சூட்டிய
எழுத்துக்காரர்களால்
தூக்கமில்லாத
தூற்றல்கள் வரலாம்!

இலக்கணம் பிழைக்கலாம்!
இடக்கரடக்கல் சருகலாம்!
முடிவுறை இல்லாமல்
முடிவடையலாம்!
கவிதைக்கு முகவரி தேவையில்லை!
அறிமுகமும் தேவையில்லை!

உன் உணர்களின்
எழுத்துக்களை
அசைவுகளை
மானிட உணர்வுகள்
உணர்கின்ற போது
சுவாசிக்கின்ற போது தான்
கவிதை பிறக்கிறது!

கவிதை
யாரும் பிரசவிக்க முடியாது
யாரும் உரிமைக்காரரும் இல்லை!
ஊரான் பிள்ளைக்கு
தன்பெயர் வைக்கும்
பாக்கியம் கவிதைக்கே துரதிஸ்டம்!

உன் சிந்தைகளை
சிறையிடாதே!
உன் எழுத்துக்களை
மௌனியாக்காதே!
இயலுமை உள்ளவரை எழுது!
சமூகத்தின் ஓரத்தில் நின்று
சராசரி மனிதனாக எழுது!
இலக்கியம் தேடும்
சமூகமயமாதல் வரை எழுது!

*கிண்ணி*
FAHMY Mohamed

Related posts

ஆடையை எரித்த நட்சத்திரம் – பின்னணி மதத்தலைவர்களா?

wpengine

மஹிந்த கட்சியின் ஆதரவுடன் புத்தளம் தவிசாளர் கே.எஸ்.பாயிஸ்

wpengine

சட்டமா அதிபரின் ஆட்சேபனை உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

Editor