பிரதான செய்திகள்

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி கேரள கஞ்சாவினை கடத்திச் சென்றவர்களை கனகராயன்குளம் பொலிஸார் இன்று அதிகாலை 1 மணியளவில் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் – புத்தளம் நோக்கி சென்ற வாகனத்தை கனகராயன்குளம் பகுதியில் வழிமறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் குறித்த வாகனத்தில் பயணித்த, புத்தளத்தைச் சேர்ந்த 20, மற்றும் 25 வயதுடைய இளைஞர்களை பொதி செய்யப்பட்ட 13 கேரள கஞ்சா பக்கற்றுக்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த இருவரையும் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

சட்ட விரோத மண் அகழ்வு! மட்டக்களப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்.

wpengine

மன்னார் நகரசபை பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற நிலையில் உள்ள காணி

wpengine

எனக்கு காணிகள் இருப்பதாக அவர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு ஒதுங்குவதற்கு தயார் முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine