Breaking
Tue. Nov 26th, 2024

(தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா)

சக்தி தொலைக்காட்சியில் கடந்த ஒளிபரப்பான மின்னல் நிகழ்ச்சி காலத்தின் தேவையென பலரும் கருத்து வெளியிட்டுவந்த நிலையில் அதனை பார்க்க வேண்டும் என்ற ஆவலின் காரணமாக அவற்றை பார்த்தேன்,இதில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

அதாவுல்லா அவர்கள் பற்றி பல விமர்சனங்களை பலர் தெரிவித்த போதும்,இன்று வடக்கும்,கிழக்கும் பிரிந்துள்ளமைக்கு மிகவும் முக்கியமானவர் என்பதை எவரும் மறந்து பேசமுடியாது,
குறிப்பாக றிசாத் பதியுதீன் அவர்கள் தலைமை தாங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தெளிவாக மீண்டும் வடக்கும்,கிழக்கும் இணைவதை எதிர்த்துவருகின்றது என்பதை பகிரங்கமாக தெரிவித்துவருகின்றதையும் இதனோடு தொடர்புபடுத்துவது பொருத்தமாகும்.குறிப்பாக இதற்கான நியாயமான காரணங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

இதனை கிழக்கு முஸ்லிம்கள் முழுமையாக அங்கீகரித்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.ஒரு பெரும்பன்மை சமூகம் தனது பெரும்பான்மையினை இழந்து சிறுபான்மையிடம் அடைக்கலம் புகுவது போலான ஒரு செயலாகும்.தான் பிரதி நிதித்துவப்படுத்தும் வடக்கில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்கள் அவர்களது அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்,அத்துடன் ஏனைய சமூகங்களும் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உறுதியான நோக்குடன் செயற்படும் ஒரு அரசியல் தலைவர் றிசாத் பதியுதீன் என்பதை சகலரும் அறிவார்கள்…..

இந்த நிலையில் இன்றைய மின்லின் பக்கம் மீண்டும் பார்வையினை செலுத்துவோம்……….
கேள்வி ரங்கா கேட்கிறார் –

அதாவுல்லா அவர்களே,பாருங்கள் தற்போது அமைச்சர்கள் 60 பேர்கள் இருக்கின்றார்கள்,ஜ.தே.முன்னணியினரும் நாங்களே அமைச்சர்கள் என்று,இப்போது வணிகத் துறை அமைச்சராக ஜோன்ஸ்டன் அவர்கள் அமைச்சுக்கு சென்று பணியாற்றுகின்றார்.

ஆனால் அவருக்குரிய வீட்டில் வேறு ஒருவர் இருக்கின்றார்.எப்படி இந்த வீட்டில் இருக்க முடியும்.
பதில் அதாவுல்லா அவர்கள் – ரங்கா இப்போது இதுவா பிரச்சினை.உடனடியாக அவர்களை வெளியேறுங்கள் என்று எப்படி கூற முடியும்,அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கத் தானே வேண்டும் என்றார்.

அவதானிப்பு –
இந்த நாட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தினர் தான் செயற்படுகின்றார்கள் என்று கூறுபவர்கள்,சிறுபான்மை சமூகத்திற்குள் பிரச்சினையினையும் ,பிளவுகளையும் தோற்றுவிக்க முனையும் ஒரு நிகழ்ச்சியாக இந்த மின்னல் இருக்கின்றது.ஊடக தர்மம் இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.அண்மையில் இடம் பெற்ற சட்டன சிங்கள நிகழ்ச்சியிலும் இந்த ரங்கா இதே போன்று ஆளும் கட்சியினரிடம் கேட்ட போது அவரம் இந்த கேள்விக்கு பதிலிருக்கவில்லை.அவர்களும் புரிந்து கொண்டார்கள் இந்த ரங்கா சிறுபான்மை சமூகம் பற்றி எம்மிடம் கேள்வி கேட்டு அவர்களை வேதனையடையச் செய்யும் வேளையினை செய்கின்றார் என்று.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமர் மாற்றத்துடன்,பாராளுமன்ற கலைப்பும்,இடம் பெற்றதையடுத்து நீதிமன்ற செயற்பாடுகள்,உள்ளிட்ட சட்ட சிக்கல்கள் தொடர்பில் மிகவும் ஆழமாக பார்க்கப்பட்டுவருகின்ற நிலையில,நிலையற்ற அரசியல் நிலையினையடுத்து அரசாங்கம் தமது பலத்தை நிரூபிக்க பல உறுப்பினர்களை தமது அணியுடன் இணைத்து கொள்ள முயற்சிகளை செய்துவருகின்றது.இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதிவெலயிலும்,அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்களுக்கு கெப்பட்டிபொலயிலும் (சிராவஸதி) வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு இவர்களது காலம் முடிவடைந்தால் இது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சு அவர்களுக்கு எழுத்து மூலமான கடிதங்களை அனுப்பும் அதனடிப்படையில் அவர்கள் செயற்படுவார்கள்,தற்போது றிசாத் பதியுதீன் அவர்கள் தற்காலிகமாக வசித்துவரும் ரங்கா கேள்வி கேட்ட வீட்டில் இதற்கு முன்னர் அமரர் ஜயலத் ஜயவர்தன அவர்கள் வசித்து வந்தார்,அவரது பிற்பாடு அமைச்சராக வந்த றிசாத் பதியுதீன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.றிசாத் பதியுதீன் அவர்கள்,மீள்குடியேற்ற,அனர்த்த நிவாரண அமைச்சராகவும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சராக நிண்டகாலம் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவரை இப்போதே வெளியேறுங்கள் என்று அநாகரியம் தெரியாத அரச அதிகாரிகள் இந்த நாட்டில் இல்லை.ஆனால் சக்தி தொழலைக்காட்சி என்பது நீதிமன்றமோ,அரச நிறுவனமோ அல்ல.ஊடகத்தை தொழிலாக கொண்டு வாழும் இலாபம் ஈட்டும் நிறுவனம் மட்டுமே.
ஒரு முறை பாராளுமன்ற பிரதி நிதியாக வருவதற்கு ரங்காவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.அடுத்த முறை அது பறிக்கப்பட்டது.வேதனையும்,சோதனையும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்ற புதுமொழிக்கு ஒப்ப சிறுபிள்ளைத்தனமாக கேள்விகளை கல்விமான்களிடம் கேட்டு மூக்குடைப்பட்டு போன நிலையில் இன்றைய மின்னலில் ரங்கா மாறியது,இனியும் இவ்வாறான பொறுப்பற்ற கேள்விகள் அவமானத்தை தான் ஈட்டிக்கொடுக்கும் என்பதுடன்,மக்கள் மத்தியில் சக்தி தொலைக்காட்சிக்கு இருந்து வரும் செல்வாக்கு ஸ்ரீரங்கா போன்ற ஊடகவியலாளர் என்பவர்களினால் சரிவினை சந்திக்க நேரிடும் என்பது எனது அவதானிப்பாகும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *