பிரதான செய்திகள்விளையாட்டு

அணியின் பயிற்சியாளராக முஷ்டாக் நியமனம்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் இடது பக்க சுழல் பந்து வீச்சாளர் முஷ்டாக் அஹமது. 47 வயதான இவர், பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். 

அவரது பயிற்சி காலம் கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் அவரது காலம் வரும் ஜூலை மாதத்தில் இருந்துதான் நீட்டிக்கப்படும்.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் குறுகிய கால சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் ஒரு மாதமே ஆகும். பின்னர் நீண்ட கால பயிற்சியாளராக மாற வாய்ப்புள்ளது.

முஷ்டாக் அஹமது ஏற்கனவே 2016 முதல் 2017 வரை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும், இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

Related posts

ஹக்கீமுக்கு கேள்விகளின் கனதியும், மௌனத்தின் அர்த்தமும்

wpengine

வவுனியாவில் இப்படியும் ஒர் இளைஞனா வியக்க வைக்கும் செயற்பாடு

wpengine

வட மாகாண முதலமைச்சரின் கருத்துக்கள் முற்றிலும் இனவாதமான கருத்தாகும்-கருணா

wpengine