பிரதான செய்திகள்

சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு மஹிந்த ஆலோசனை

சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பான குறித்த புதிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவுரை வழங்கியுள்ளார்.

தனிப்பட்ட ஒவ்வொருவரின் தேவைகளுக்காக பதவியை பழி வாங்கல்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என மஹிந்த ராஜபக்ச, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தெற்கின் ஊடகமொன்று ஊடாக அவர் இந்த அறிவுரையை வழங்கியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு மிகவும் முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பொறுப்பினை உரிய முறையில் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கின்றேன்.
சில பொலிஸ் உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் தனிப்பட்ட குரோதங்களை தீர்த்துக்கொள்ள பதவி நிலைகளை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கின்றேன்.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் நியாயமாக நடந்து கொள்வார் என எதிர்பார்க்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

இரகசியமாக குழந்தையை பெற்று குளியலறை வடிகாலில் வீசிய தாய் – புத்தளத்தில் சம்பவம்.

Maash

இறக்கை உடைந்த மூதூர் இரத்த உறவுகள்!???

wpengine

ரணில்,சஜித் மீண்டும் சண்டை! பேச்சுவார்த்தை தடை

wpengine