(ஏ.எச்.எம். பூமுதீன்)
குர்ஆன், ஹதீஸை யாப்பாகக் கொண்ட மு,கா. தலைவர் ரவூப் ஹக்கீம்- அவை இரண்டுக்கும் மாற்றமாக உளறி வரும் கருத்துக்கள் இன்று முஸ்லிம் சமூகத்தினரை வெகுவாக முகம் சுளிக்க வைத்துள்ளது.
ஒரு மனிதனை – அற்ப அரசியலுக்காக எவ்வளவு தூரம் கற்பனையாக மானபங்கப்படுத்த முடியமோ அவ்வளவு தூரத்துக்கு மானபங்கப்படுத்தும் பேச்சுக்களை ஹக்கீம் அண்மைக்காலமாக உளறி வருவது அவரது அரசியல் பயனத்துக்கு தனக்குத்தானே மண்ணை வாரியிறைப்பது போன்றுள்ளது.
ஓட்டமாவடியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஹக்கீம்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனை மிகக் கேவலமாக “கொட்டப்பாக்கிலும் ஊழல்” செய்கின்றார் என்று கூறி எள்ளி நகையாடினார்.
மக்கள் கூட்டத்தைக் கன்டால் போதை தலைக்கேறியவனைப் போன்று வாய்க்கு வந்ததையெல்லாம் உளறுவதும் மறுநாள் “மக்களைக் கண்டு சற்று ஆசுவாசப்பட்டு விட்டேன்” என்று கூறி உலமாக்களிடம் மன்னிப்புக் கோருவதும் அவருக்கு வழக்கமாகிவிட்டது என்பதற்காக இனியும் அவரது உளறல்களை வேடிக்கை பார்க்க முஸ்லிம் சமூகம் தயாரில்லை என்பதை இவ்வேளையில் ஆணித்தரமாக கூறிவைக்க விளைகின்றோம்.
புத்தளத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போதும் அவ்வாறு உளறி பின்னர் தலைவர் ரிஷாதிடம் – தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஊடாக மன்னிப்புக் கோரியதையும் இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகின்றோம்.
பெப்ரவரி10 உள்ளூராட்சி தேர்தல் முடிவு தனது தலைமைக்கு ஆபத்தானதாக அமையப்போகின்றது என்ற பீதி தற்போது ஹக்கீமை தொற்றிக்கொண்டு விட்டது.அதன் வெளிப்பாடுதான் இந்த உளறல்கள்.
கிழக்கு முஸ்லிம் சமூகம் – அமைச்சர் ரிஷாத் பதியுதீனை ஏற்று அங்கிகரிக்க தயாராகிவிட்டனர். சமூ கத்தின் மீது உண்மை பற்றுக் கொண்ட தலைவனாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனை முஸ்லீம் சமூகம் அடையாளம் கண்டுவிட்டது.
அதன் பிரதிபலிப்பின் ஓர் வடிவம்தான் அம்பாரை மாவட்டமெங்கும் மயில் தோகை விரித்து ஆடுவதாகும்.
அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்களின் ஆளுகைக்குட்பட்ட 6 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரசை மையமாக கொண்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வசமாக மாறப்போகின்றது.
மு.கா.தலைவர் இன்னுமின்னும் தரங்கெட்டு, தரக் குறைவாக பேசுவதை நிறுத்தாத பட்சத்தில் வேறு வழியின்றி அவரது ” கொட்டை” பாக்கை முஸ்லிம் சமூகம் ” பாக்கு வெட்டியை”க் கொண்டு நசுக்க ஒருபோதும் தயங்கமாட்டது.