Breaking
Fri. May 17th, 2024

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது)

பிரபா – ஹக்கீம் ஒப்பந்தம் வரைவதற்கு புலிகள் சார்பாக அன்டன் பாலசிங்கமும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பசீர் சேகுதாவூத்துமே ஈடுபட்டு இருந்தார்கள் என்பதற்கு அன்றய தவிசாளர் அதாஉல்லா உற்பட முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழுவில் சென்ற அனைவருமே சாட்சிகளாகும்.

சிங்கள ஆட்சியாளர்கள் பிரபாகரனின் பெயரை கேட்டாலே தொடை நடுங்கியவர்கலாகவும், அலறி மாளிகைக்குள்ளேயே பதுங்குகுழிகள் அமைத்திருந்த அன்றய காலகட்டத்தில், தலைவராக பதவி ஏற்று ஒரு வருடமும் பூர்த்தியாகாத நிலையில் ரவுப் ஹக்கீம் அவர்கள் ஒரு சூழ்நிலை கைதியாக புலிகளின் கோட்டைக்குள் ஒப்பந்த வரைபுக்கு சம்மதிக்க வேண்டிய நிலை அன்று ஏற்பட்டது.

அப்போது பசீர் சேகுதாவூத் அவர்கள் முஸ்லிம்களின் சார்பானவராக அன்றி பிரபாகரனின் விருப்பங்களை பூர்த்தி செய்யக்கூடிய புலிகளின் விசுவாசியாக செயற்பட்டார் என்பது அன்று பலருக்கு ஆச்சரியத்தினை உண்டு பண்ணியது.

அன்று தொடக்கம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் அங்கம் வகித்தது வரைக்கும் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் தவறுகளுக்கு அதன் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அவர்களும் பிரதான காரணமாக இருந்தார் என்பது பலரது அபிப்பிராயமாகும்.

முஸ்லிம் காங்கிரசை அழிப்பதற்கு செயல்பட்டுக் கொண்டிருந்த வெளி சக்திகளைவிட, பதவி, பணம், அதிகாரங்களுக்கா உள்ளுக்குள் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்த துரோகிகளிடமிருந்து கட்சியை காப்பாற்றுவதில் தலைவர் கடும் போராட்டங்களை நடாத்தினார் என்பது சிதம்பர ரகசியமல்ல.

கடந்த ஆட்சியில் மகிந்தவின் அரசாங்கத்தினை விட்டு விலகுவதில் தலைவர் ஹகீம் அவர்கள் கட்சிக்குள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தார். முஸ்லிம் மக்களின் விருப்பங்களுக்கும், உணர்வுகளுக்கும் அப்பால், தனது சுயநலனுக்காக முஸ்லிம் காங்கிரசையும், அதன் தலைவரையும் திசை திருப்ப பசீர் சேகுதாவூத் உற்பட சிலர் எடுத்த எந்தவித முயற்சிகளுக்கும் தலைவர் இடம்கொடுக்கவில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வரிந்துகட்டிக்கொண்டு இருந்த சூழ்நிலையில், முஸ்லிம் மக்களின் உணர்வுகளை பற்றி கவலைப்படாமல் அதி உயர்பீட உறுப்பினர்கள் சிலருக்கு பணம் மற்றும் அதிகார ஆசைகளை காட்டி அவர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு மகிந்த ராஜபக்சவுக்குத்தான் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும் எண்று தலைவருக்கு அழுத்தம் பிரயோகித்திருந்தனர்.

இவரை கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிடும்படி அறிவுறுத்தியிருந்தும், தனக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்ற காரணத்தினால் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியிருந்தார். அத்துடன் இவர் மகிந்தவுக்கு கட்சியையும், சமூகத்தையும் காட்டிக்கொடுத்ததுக்கு கைமாறாக தலைவருக்கும், அதியுயர்பீடத்துக்கும் தெரியாமல் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியினை பெற்றிருந்தார்.

தலைவர் ஹக்கீம் மகிந்தவுடன் முறன்பட்டுக் கொண்டிருந்தபோது இவர் அமைச்சர் பதவியினை பெற்றுக்கொண்டதன் மூலம், மகிந்தவுடன் இவருக்குள்ள நெருக்கமான கள்ளத்தொடர்பு எவ்வாறு என்பதனை புரிந்துகொள்ள கூடியதாக இருந்தது.

இவைகளெல்லாம் ஒருபுறமிருக்க, ராஜபக்ஸ சகோதரர்களினால் ரவுப் ஹக்கீமை நினைத்தவாறு கையாளமுடியாது என்பதனால், 2௦11 இல் வவுனியாவில் நடைபெற்ற மு.கா இன் பேராளர் மாநாட்டுக்கான முதல்நாள் கட்டாய அதியுயர்பீட கூட்டத்தில் தோழர் பஷீர் சேகுதாவூதை முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக தெரிவு செய்வதுக்குரிய ஏற்பாடுகளை பசீல் ராஜபக்ஸ அவர்கள் மேற்கொண்டார். அதற்காக அன்றைய அதியுயர்பீட உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்தவிடயம் தலைவருக்கு எட்டியதனால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. அதன்பின்பே பொலிபீரோ கலைக்கப்பட்டு அதிலுள்ளவர்கள் அனைவரும் அதியுயர்பீட உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு, அதியுயர்பீட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

இறுதியில் முஸ்லிம் காங்கிரஸ் மகிந்தவின் அரசாங்கத்தினை விட்டு வெளியேறியபோது மகிந்த ராஜபக்சவுக்கு காதல் கடிதம் எழுதியதுடன், மகிந்தவை திருப்தி படுத்துவதற்காக, கட்சிக்கு கட்டுப்பட்டு தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபடவுமில்லை. தேர்தலன்று வாக்களிக்க வாக்குச்சாவடிக்கும் இவர் சென்றிருக்கவுமில்லை.

தோழர் வசீரின் இவ்வாறான சமூகம் சாராத பிடிவாதத்தினால்தான் மகிந்தவின் அரசாங்கத்தினை விட்டு முஸ்லிம் காங்கிரஸ் உடனடியாக வெளியேறுவதில் காலதாமதம் ஏற்பட்டு பல விமர்சனங்களை எதிர்கொள்ளவேண்டி இருந்தது.

இன்னும் வரும்…………………….

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *