பிரதான செய்திகள்

வவுனியாவில் பொதிமோசடி! 7 பொலிஸ் முறைப்பாடு

வவுனியா கந்தசாமி கோவில் வீதியிலுள்ள பிரபல்யமான பொதிகள் அனுப்பும் நிலையத்திற்கு எதிராக 7 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து வெளிநாடுகளிலுள்ள உறவினருக்கு அனுப்பும் பொருட்கள் அங்கு சென்று சேரவில்லை என 7 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பொதி அனுப்பும் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அனுப்பப்படும் பொருட்களுக்கு 17ஆயிரம் ரூபா செலவிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டபோதிலும் அப் பொருட்கள் உறவினர்களுக்குச் செல்லவில்லை. இது தொடர்பில் பொதி அனுப்பும் நிலையத்தில் கேட்டால் உங்களுடைய உறவினருக்கு வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த முறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஸ்ரீநகர் மக்களவை இடைத்தேர்தலில் பரூக் அப்துல்லா வெற்றி

wpengine

ரஷ்யாவுக்கு இனிமேல் Visa Card இன்னும் ஏனைய வசதிகள் இல்லை அதிரடி நடவடிக்கை

wpengine

கழிவுகளை கொட்டுவதல்! உரிமையாளர்களுக்கு எதிராக நீதி மன்றில் வழக்கு தாக்கல்

wpengine