பிரதான செய்திகள்

மன்னார் பள்ளிமுனை காணிப்பிரச்சினை! இன்று நில அளவீடு

கடற்படையினர் நிலை கொண்டுள்ள மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணி இன்று நில அளவீடு செய்யப்பட்டள்ளது.

குறித்த காணி தொடர்பாக வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்று வந்த நிலையில், நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக, இணக்கப்பட்டின் அடிப்படையில் இன்று குறித்த கடற்படை முகாம் நில அளவீடு செய்யப்பட்டது.

நில அளவீடு இடம் பெற்ற குறித்த பகுதிக்கு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன், நில அளவைத்திணைக்களத்தின் மன்னார் மாவட்ட அலுவலகர்களும் உள்ளிட்டவர்கள் வருகைத்தந்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த பகுதி நில அளவீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை விரைவில் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் குறித்த பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டம் தொடர்பான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்

wpengine

இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் கட்டார்

wpengine

மன்னார் பொது வைத்தியசாலையின் அமந்த போக்கு! றோகினியின் மரணம் சொல்லும் உண்மையும்?

wpengine