துருக்கி பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

(இக்பால் அலி)

முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் துருக்கி நாட்டில் பல்கலைக்கழக பட்ட கற்கை நெறியை மேற் கொள்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகச் செயலாளர் ரஷி ஹாசிம் தெரிவித்தார்.

இந்தக் கற்கை நெறிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 1995 ஆம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்களாகவும் க.பொ.த சாதாரண தரத்திலும் க.பொ.த உயர் தரத்திலும் நல்ல பெறுபேறுகளைக் கொண்வர்களாகவும் குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

ஒன்லைன் மூலம் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து அனுப்பவுள்ளதால் இம்மாதம் 10 திகதிக்கு முன்னர் விண்ணப்பம் செய்யவுள்ள மாணவர்கள் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சின் அலுவலகத்துடன் உடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

0757038874, 0718156031, 0777840844, 0772086676 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares