பிரதான செய்திகள்

வெள்ளிமலை காணி அபகரிப்பு! தொடர்பான விழிப்புணர்வு ஜும்மா தொழுகையும் கையெழுத்து வேட்டையும்

(சிபான்)

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் பண்டாரவெளி கிராம சேவையாளர் பகுதியில் உள்ள வெள்ளிமலை முஸ்லிம் மக்களின் காணியினை அடாத்தாக அரிப்பு கத்தோலிக்கர்கள் ஆக்கிரமித்ததை கண்டித்து முசலி அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம், வெள்ளிமலை பள்ளிவாசல் ஒன்றினைந்து முசலி பிரதேசத்திற்கான பொதுவான ஜும்மா தொழுகையினையும்,காணி அபகரிப்பு தொடர்பாகவும்,கையொழுத்து வேட்டைகளையும், தொழுகையினை நடாத்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு இந்த காணிப்பிரச்னை வெள்ளிமலை மக்களுக்கான பிரச்சினையாக யாரும் பார்க்க வேண்டாம்,இது முழு முசலி முஸ்லிம் மக்களின் பிரச்சினையாக எல்லாரும் பார்க்க வேண்டும்.எனவும்.

மேலும் அடாத்தாக காணியினை அபகரித்த விடயத்தையும்,யாருக்கும் தெரியாமலும் சட்ட விரோதமான முறையில் காணி வழங்க ஆவணங்களை மேற்கொண்ட உரிய அதிகாரிக்கு எதிரான கையொழுத்து பெற்றுக்கொள்ளும் நிகழ்வும் இடம்பெற உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் முசலி பிரதேசத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளிவாசலுக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

Related posts

பாலியல் உணர்வினை தூண்டும் புகைப்படங்களை பிரான்ஸ் அமைச்சருக்கு அனுப்பிய பெண்!

wpengine

மாப்பிள்ளை வீட்டாரிடம் மணமகள் பிரியங்கா கேட்ட திருமணப்பரிசு என்ன தெரியுமா?

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor