வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஷ்வரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான ப.அரியரட்ணம், முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் மத்திய கல்வி அமைச்சரை சந்தித்து பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை ஊடாக 676 தொண்டர் ஆசிரியர்களுக்கும் நியமனத்தை வழங்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 108வது அமர்வு நேற்று வடமாகாண சபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது தொண்டர் ஆசிரியர்கள் மாகாண சபைக்கு வெளியே கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தார்கள்.
இந்நிலையில் மேற்படி விடயம் சபையில் எடுத்து கொள்ளப்பட்ட து. இதன்போது மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் 676 தொண்டர்ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்பட வேண்டும் எனவும், அவர்களுக்கு லொக் என்றி மற்றும் பரீட்சை நடத்த கூடாது எனவும் கேட்டு கொண்டார்.
மேலும் மாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் கூறுகையில் 676 பேருக்கும் நியமனம் வழங்கப்பட வேண்டும். அதுவும் தேர்தல் அறிவிக்கப்பட முன்னதாக நியமனம் வழங்கப்பட வேண்டும் என கே ட்டு கொண்டார்.
இதேவேளை கல்வி அமைச்சர் க.சர்வேஷ்வரன் கருத்து தெரிவிக்கையில்,
676 பேருக்கு நியமனம் வழங்கலாம் என கூறப்பட்டுள்ளதே தவிர 676 பேருக்கும் நியமனத்தை வழங்குங்கள் என கூறப்படவில்லை.
மேலும் லொக் என்றி என்ற விடயமும் கூறப்பட்டுள்ளது என கூறினார்.
இந்நிலையில் கல்வி அமைச்சர் க.சர்வேஷ்வரன் மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர் ப.அரியரட்ணம் ஆகியோர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கி 676 தொண்டர் ஆசிரியர்களுக்கும் நியமனத்தை வழங்க கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
இந்த குழுவை மாகாண சபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் உருவாக்கியுள்ளார்.