பிரதான செய்திகள்

மன்னாரில் கடல் உணவு ஏற்றுமதி நிகழ்ச்சி

கடல் உணவு ஏற்றுமதி தொடர்பில் விழிப்புணர்வு செயலமர்வு மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த செயலமர்வு மன்னார் மீன்பிடி திணைக்கள கேட்போர் கூடத்தில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தினால் இன்று மதியம் நடைபெற்றுள்ளது.

மன்னார் நகரப்பகுதில் 2015ஆம், 2016 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் மீன்களில் நோய், தொற்றுகிருமிகள் காணப்படுவதனால் நெருப்புக்காச்சல், வயிற்றோட்டம் போன்ற நோய்த்தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வு அறிக்கைகயில் தெரியவந்துள்ளதாக தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செயலமர்வில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள், மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட, பகுதி, மீன் வாடி உரிமையாளர்கள், மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள் மீன் ஏற்றுமதியாளர்கள், ஐஸ் உற்பத்தியாளர்கள், மீன், விற்பனையாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

பெயர் குறிப்பிட விரும்பாத கண்டியைச்சேர்ந்த சகோதரர் ஒருவரூடாக பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கு நிதியுதவி

wpengine

World Islamic Conference President mythreepala Sirisena participated

wpengine

காட்சிப்படுத்தக் கூடாது! ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ உத்தவிட்டுள்ளார்.

wpengine