வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரிவினைவாத, இனத்துவேச அடிப்படையில் செயற்படுகிறார். எனவே அவரின் நடவடிக்கை, நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க செய்தியாளர்களிடம் இதனை நேற்று தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றி, வடக்கு மாகாணசபை நடவடிக்கைகளை மீளமைப்பதில் அரசாங்கம் முன்னின்று செயற்படுகிறது. எனினும் விக்னேஸ்வரன் அந்த முயற்சிகளுக்கு ஆதரவை வழங்குவதைப் போன்று தெரியவில்லை.
அரசியலமைப்புக்கு எதிராக விக்னேஸ்வரன் செயற்பட்டால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் வர்ணசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை வடமாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 20 வீதம் மாத்திரமே பயன்படுத்தப்பட்டதாகவும் மீதித்தொகை திறைசேரிக்கு திரும்பி விட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்