Breaking
Mon. Nov 25th, 2024
Sri Lanka's Secretary of Defense Gotabaya Rajapaksa speaks during a news conference in Colombo January 24, 2013. REUTERS/Dinuka Liyanawatte

தன்னிடம் ஆயுத பலம், படை பலம் என்பன காணப்பட்டமையால் அவர் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை பெறுவதற்கு விரும்பவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

பேச்சுவார்த்தை மூலம் தீர்வை பெறுவதற்கு பிரபாகரன் விரும்பவில்லை. இதற்கு அவரிடம் நியாயபூர்வமான காரணங்கள் இருந்ததை தாம் அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதற்காக காரணத்தையும்அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பிரபாகரன் பூச்சியத்திலிருந்தே விடுதலைப் புலிகள் அமைப்பை கட்டி எழுப்பினார். நான் பதவி ஏற்கும் போது விடுதலைப் புலிகள்அமைப்பில் 35,000 பேர் இருந்ததாக தகவல் கிடைத்தது.

தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று படைகளையும் அவரால் கட்டி எழுப்ப முடிந்தது.

இலங்கை படையினரிடம் இருந்த ஆயுதங்களுக்கு நிகரான ஆயுதங்களை அவரால் பெற முடிந்தது.

படையினர் மற்றும் பொலிஸார் செல்ல முடியாத அளவிலான நிலப்பரப்பினை அவரால் பரிபாலனம் செய்ய முடிந்தது.

முல்லைத்தீவு, ஆனையிறவு, பூநகரி ஆகிய பகுிகளை பார்க்கையில் படையினரை தோற்கடிப்பதற்கான ஏதுநிலைகள் காணப்பட்டன.

இவ்வாறான நிலையிலேயே அவருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வை பெறுவதற்கு அவர் விரும்பவில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *