Breaking
Fri. Apr 26th, 2024

மின்னஞ்சல் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளுக்கான ‘@’ குறியீடு என்பவற்றைக் கண்டுபிடித்த ரேமண்ட் டொம்லின்சன், தனது 74ஆவது வயதில் காலமானார்.

அமெரிக்காவில் பிறந்து மாஸாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம்பெற்ற டொம்லின்சன், அர்பாநெட் சிஸ்டம்  முறையில், வலைப்பின்னல் இணைப்பால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள ஒரு கணினியிலிருந்து இருந்து இன்னொரு கணினிக்குக் கடிதங்களை அனுப்பும் முறையை 1971ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டுபிடித்தார்.

பின்னர் @ குறியீட்டுடன், தொலைவிலுள்ள ஏனைய கணினிகளுக்கு அந்தத் தகவல்கள் போய்ச்சேரும் புதிய தொழில்நுட்பத்தையும் வடிவமைத்தார்.

இன்று மின்னஞ்சல்; என்றழைக்கப்படும் இந்த செலவில்லாத துரிதமான கடிதப் போக்குவரத்தின் தந்தையாக விளங்கிய ரே டொம்லின்சன் தனது 74ஆவது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார்.

அயராத உழைப்பு மற்றும் தன்னடக்கத்தின் அடையாளமாக விளங்கிய அவரது மறைவுக்கு உலகின் பலநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான இணையதளவாசிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கூகுளின் ‘ஜிமெயில்’ குழுமமும் ரே டொம்லின்சனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *