உத்தரபிரதேசம் மாநிலம் கோராக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம்
நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே இந்த சம்பவத்துக்கும் காரணம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டினார். மேலும் மருத்துவமனை முதல்வரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கோரக்பூர் மருத்துவமனையில் இன்று காலை மேலும் ஒரு குழந்தை உயிரிழந்தது. இதனால் குழந்தைகளின் பலி எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது.
நேற்று(சனிக்கிழமை) மட்டும் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை பலி எண்ணிக்கை 60-ஆக இருந்தது. இதனிடையே, மருத்துவமனையில் முதல்வர் ஆதித்யநாத் இன்று பார்வையிட உள்ளார்.