மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகத்தில் பதிவு செய்த முஸ்லிம் விளையாட்டு கழக வீரர்களை பல வருடகாலமாக ஊக்குவிக்காமல் பக்கசார்பாகவும்,சுயநலத்துடன் முசலி பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் செயற்பட்டுவருவதாக முசலி விளையாட்டு கழக சம்மேளனம் குற்றம்சாட்டி உள்ளது.
மேலும் தெரிவிக்கையில்;
முசலி பிரதேசத்தில் முஸ்லிம் விளையாட்டு வீரர்கள் பலர் இருந்தாலும் பிரதேச செயலகத்தில் விளையாட்டு உத்தியோகத்தராக கடமையாற்றும் அதிகாரி முஸ்லிம் விளையாட்டு கழங்களுக்கு தகவல்களை கொடுப்பதில்லை என்றும்,முசலி பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 28க்கும் மேற்பட்ட விளையாட்டு கழங்கள் இருந்தும் அவர்களை சந்தித்து இதுவரைக்கும் ஆரோக்கியமான கருத்துகளையும்,நல்ல ஆலோசனைகளையும் வழங்குவதில்லை என்றும் வீரர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
அது மட்டும் அல்லாமல் பிரதேச மட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றால் அதனை கூட கிருஸ்தவர்கள் வாழும் அரிப்பு,சவேரியார்புரம்,கொக்குபடையான் போன்ற இடங்களை தெரிவு செய்து விளையாட்டுகளை நடாத்தி அந்த கிராமங்களை அபிவிருத்தி செய்கின்றார்கள் என்றும் விசனம் தெரிவிக்கின்றார்.