Breaking
Fri. May 17th, 2024

இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு, மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், நேற்று (31) காலை 9.30 மணியளவில் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

மன்னார் பஸ் தரிப்பிடத்தில் இருந்து, நேற்று (30) அதிகாலை 4.30 மணியளவில், யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை   போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததோடு, ஜெயபுரம் பகுதியில் வைத்து பஸ்ஸின் சக்கரத்துக்குகு காற்று போய் இடை நடுவில் நின்றுள்ளது.

இவ்விடயம்,  ஊடகங்களில் வெளியாகிய நிலையிலும், மாவட்டச் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், குறித்த பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக,  இலங்கை  போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு, மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், இன்று (31) காலை 9.30 மணியளவில் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு, அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, பஸ் பற்றாக்குறை காரணமாகவே, குறித்த பஸ் சேவையில் ஈடுபட்டாகவும், எதிர்வரும் காலங்களில் அவ்வாறான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படமாட்டாது எனவும், மன்னார் சாலை அதிகாரிகள் தெரிவித்ததுடன்,  மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரிங்களுக்காக  மாவட்டச் செயலாளரிடம் மன்னிப்பும் கோரினர்.

மேலும்,  மன்னார் சாலையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக   மாவட்டச் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

இவற்றை கவனத்தில் கொண்ட மாவட்டச் செயலாளர், இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.


Editor

By Editor

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *