பிரதான செய்திகள்

வவுனியா பகுதியில் தொழுகை பிரச்சினை முஸ்லிம் மீது முஸ்லிம் தாக்குதல்

வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வயல் திடல் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது மற்றுமொரு முஸ்லிம் குழு தாக்குதல் மேற்கொண்டமையால் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று -26-காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முஸ்லிம்களின் நோன்பு பெருநாள் நாடு பூராகவும் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வயல் திடல் தொழுகையில் முஸ்லிம்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

அவ் இடத்திற்கு சென்ற பிறிதொரு முஸ்லிம் குழுவினர் அவ்வாறு வழிபடுவது தவறு எனவும் அவ் வழிபாட்டை நிறுத்துமாறு கோரியும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இரும்பு கம்பிகள் மற்றும் தடிகள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் வயல் திடல் தொழுகையில் ஈடுபட்ட ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா, உலுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

அச்சுறுத்தல் இல்லாத நிலையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள தேவாலயங்கள்.

wpengine

இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் தமது தாய் நாட்டுக்கு துரோகமிழைத்ததில்லை

wpengine