Breaking
Sun. Nov 24th, 2024

வட்ஸ்அப்பின் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர், வட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவற்றை நமது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் ஒருவருக்கு நாம் அனுப்ப வேண்டிய செய்திகளை மறதியால் அனுப்பாமல் விடுவதும் உண்டு, இதற்காக தற்போது அண்ரொய்ட் போன்களில், வட்ஸ்அப்பில் Scheduler என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில், Scheduler for WhatsApp மற்றும் Scheduler NO ROOT செயலிகளை டவுன்லோட் செய்ய வேண்டும். பின்னர், இன்ஸ்டால், செட்டிங்கஸ், அக்சஸ்ஸிபிலிட்டி, சர்விசஸ், அப்ஷன்களை அழுத்த வேண்டும்.

இதையடுத்து ‘+’ என்ற ஐகன் வட்ஸ்அப்பின் அடியில் தோன்றும். இதனை கிளிக் செய்து நேரம், திகதி உள்ளிட்டவற்றை தேர்வு செய்து மெசேஜ்களை Schedule செய்து, தேவையான நபர்களுக்கு தேவையான நேரத்தில் அனுப்பி கொள்ளலாம்.

மேலும். நாம் இந்த Scheduler ஐ பயன்படுத்தும் போது நமது மொபைலின் திரை லாக் அல்லது எந்தவித பின் லாக், அல்லது ஃபிங்கர் பிரின்ட் லாக் உள்ளிட்ட லாக்குகளை பயன்படுத்தக்கூடாது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *